உயர்நிலைக் கல்வியில் ஏற்படும் மனஅழுத்தம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், என்னுடைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சிறிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

உயர்நிலைக் கல்வியில் ஏற்படும் மனஅழுத்தம் :

மாணவர்கள் தங்களைப் பற்றி சுயமதிப்பீடு செய்து கொள்ளும்போது எப்படி உணர்கிறார்கள் .

அவர்களுடைய புகார்கள் முன்னர் இருந்ததைப் போலவே அதே மாதிரியானவையாகவே இருந்தபோதிலும் கவலைகள் இன்னமும் அவர்களுடைய மனதை விட்டு அகலவில்லை.

வளரிளம் பருவத்தினர் / மாணவர்களின் உணர்வுகள் (தெளிவாக புரிவதற்காக இது முதற்கொண்டு "நான் " என்று குறிப்பிடப்படுகிறது)

  • ஆசிரியர் /பேராசிரியரிடம் எனது கேள்விகள் /சந்தேகங்களை கேட்பதற்கு நான் மிகவும் கடினமாக உணர்கிறேன்.
  • நான் எப்பொழுதும் தூக்கக்கலக்கமாகவே உணர்கிறேன்.
  • என்னுடைய பாடத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
  • நான் கற்கும் பாடங்களை மறந்து விடுகிறேன்.
  • தேர்வுகள் நெருங்கும்போது நான் எப்பொழுதும் பதற்றமாக உணர்கிறேன்.
  • என்னுடைய எதிர்காலம் மற்றும் உடல் தோற்றத்தைப் பற்றி நான் அளவுக்கதிகமாக சிந்திப்பதாக நினைக்கிறேன்.
  • தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் கிடைக்காது என்று பயப்படுகிறேன்
  • நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்.
  • கடவுளே, இந்த பல்வகை கற்றல் மையங்கள் (தனிப்பயிற்சி, நீட் பயிற்சி) என்னைப் பெருமளவில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
  • என்னுடைய முந்தைய தேர்வை விட என்னை மேம்படுத்திக் கொள்வது குறித்து எனக்கு பயம் இருக்கிறது.
  • நான் சிறப்பாக செயல்பட்ட போதிலும் குறைவான மதிப்பெண்களே பெறுகிறேன்.
  • வினாத்தாளை பார்க்கும்போது எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.
  • என் பெற்றோர்களுக்கு நான் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
  • ஒரே பாடத்தில் நான் திரும்பத்திரும்பத் தோல்வி அடைகிறேன், ஏனென்று எனக்குத் தெரியவில்லை.
  • நான் மொபைல் /ஸ்மார்ட் டிவிக்கு அடிமையாக இருக்கிறேன் அல்லது ஈர்க்கப்படுகிறேன்.
  • என்னுடைய வேலை தொழில் வாழ்க்கையை பற்றி திட்டமிடுவதில் நான் குழப்பமடைகிறேன்.
  • நான் தற்காலிகமான விடலைப் பருவ காதலில் இருக்கிறேன், ஆனால் என்னால் அதை விட்டு வெளியேற முடியவில்லை.
  • "தேர்வில் நான் தோல்வி அடைந்தால் என்ன ஆகும் " என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி எழுகிறது.
  • என்னுடைய கல்வி கற்கும் நேரத்தை நான் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன்.
  • தேர்வு எழுதுவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது.
  • எதனால் என்று தெரியவில்லை ஆனால் நான் மிகவும் சோம்பலாக உணர்கிறேன்.
  • நான் சுயஇன்பம் செய்கிறேன், இது எனது கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை பாதிக்குமா?
  • சில சமயங்களில் எனக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சாதாரண மனிதனிடமும் / உளவியல் ஆலோசகரிடமும் பதில் இருக்கிறது. ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால், மாணவர்கள் தங்களுடைய உணர்வுகளை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை ஆனால் சில நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் நிராகரிக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

அல்லது பெற்றோர்களிடமிருந்து "எங்களுடைய இளமைப்பருவத்தில் நாங்களும் இதே போல் உணர்ந்தோம் " என்கிற பதிலே வரும் என்று நினைக்கிறார்கள்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அடுத்தவர்களுடைய பேச்சை கவனித்து கேட்கும் பழக்கத்தை தவற விட்டுவிட்டோம்.

Back To Top