வினையாகும் கள்ளக்காதல் விளையாட்டுக்கள். பாரபட்சமே இல்லாமல் கதறும் குடும்பங்கள்.. என்ன காரணம்

சென்னை : விபரீதத்தை ஏற்படுத்தும் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் அதிகரித்து இருப்பதால், அவை குடும்பங்களை நிலைகுலையச் செய்து வருகின்றன. அண்மைக்காலங்களில் கள்ளக்காதல் கொலைகள், குற்றங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளன.

மதுபோதை, புதிய நண்பர்கள் சவகாசம், மணவாழ்க்கையில் திருப்தி இன்மை, வேலைக்கு செல்லும் இடத்தில் நட்பு, பொருளாதார திறமின்மை, இனக்கவர்ச்சி, ஆறுதல் பேச்சுக்கள் போன்றவற்றை இதற்கு காரணமாக கூறலாம்.

கடந்த இரண்டு மாதங்களில் தினசரி 2 அல்லது 3 கள்ளக்காதல் குற்றங்களை செய்தியாளனாக தமிழகத்தில் பார்த்து வருகிறேன். ஏராளமானோர் கள்ளக்காதல் கொலைகளால், அல்லது தற்கொலைகளால் பலியாகி உள்ளனர்.

நிறைய கொலைகள்

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 குற்றங்களுக்கு மேல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இந்த சம்பங்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அல்லது தற்கொலை செய்துள்ளனர். இவை எல்லாம் போலீசாரின் வழக்குகளால் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த போலீசாருக்கு கள்ளக்காதல் தான் காரணம் என்று வந்ததால் வெளியில் தெரிந்தது.

Click Here to View More Details

Back To Top