கோவை மாணவி தற்கொலை...இதை செய்யுங்க ஒருத்தன் கிட்ட வரமாட்டான்..மாணவிகளுக்கு உளவியல் நிபுணர் ஆலோசனை

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி மாறியபின்னும் தற்கொலை செய்யும் அளவுக்கு மாறிய மாணவியின் மனநிலை, உளவியல் ரீதியான பார்வை, மாணவ-மாணவியர், பெற்றோர், பள்ளி நிர்வாகம் குறித்த வழிகாட்டுதல்களை உளவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். என் உடம்பு, என் மனது யாரும் ஆளுமை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிற மன நிலையை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர்.

கோவை மாணவி தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலை கடந்த வாரம் தமிழகத்தை அதிர வைத்த ஒரு சம்பவம் கோவை மாணவி தற்கொலை விவகாரம். ஆசிரியரால் தனக்கு நேர்ந்த செக்ஸ் டார்ச்சரை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த மாணவி இறுதியில் தேர்ந்தெடுத்தது தற்கொலை. தன்னுயிரை மாய்ப்பது கொடூரமான நிகழ்வு. அதிலும் சமூக அவலத்தால் அந்நிலைக்கு 17 வயது மாணவி தள்ளப்பட்டது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.

Click Here to View More Details

Back To Top